கூகிள் நிறுவனம் ரூ. 26,172 கோடியை இங்கிலாந்து தம்பதிக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த சிவான்- ஆடம் ராஃப் தம்பதி, தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகி, 'ஃபவுண்டெம்' (Foundem) என்ற விலை ஒப்பீட்டு இணையதளத்தை 2006இல் தொடங்கினர்.
ஆனால் திடீரென கூகுள் சர்ச் ரிசல்ட்டுகளில் பவுண்டேம் இணையதளம் காட்டப்படவில்லை. முதலில் இது தங்களுடைய இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என கருதினர்.
ஆனால் பிற தேடு பொறிகளில்(Search Engine) இணையதளம் காட்டப்பட்டுள்ள நிலையில், கூகுள் சர்ச் ரிசல்ட்டுகளில் மட்டும் காட்டப்படாத நிலையில் கூகிள் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர். 2 ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் இதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கவில்லை.
பொதுவாக இது போன்ற இணையதளங்களை மக்கள் எத்தனை முறை கிளிக் செய்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் வருமானம் கிடைக்கும். உலகில் தேடுபொறியை பயன்படுத்தி வரும் 90% பேர் கூகிள் நிலையில், அதில் தங்களது இணையதளம் காட்டப்படாததால் அவர்கள் வருமானத்தை இழந்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்கா இங்கிலாந்தில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை நாடினர். 2017ஆம் ஆண்டில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, தம்பதிக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் ரூ.26,172 கோடி) வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த கூகுள் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. ஐரோப்பிய மேல்முறையீட்டு நீதிமன்றமும் கூகுளின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து ரூ. 26,172 கோடியை நஷ்ட ஈடாக வழங்கி ஆக வேண்டும் என அறிவித்துள்ளது.
ibctamilnadu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments