மேலதிகாரியால் ஏற்பட்ட துயரம்! முடங்கிய இளம் பெண்ணின் வாழ்க்கை!

மேலதிகாரியால் ஏற்பட்ட துயரம்! முடங்கிய இளம் பெண்ணின் வாழ்க்கை!


சீனாவில் பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் திட்டியதால் இளம் பெண் ஒருவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

நாம் பணிபுரியும் இடங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாளின் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் இங்குதான் செலவிடுகிறோம். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் நீண்ட நேரம் பழகுகிறோம். இதன் விளைவாக, பணியிடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நம் மனநிலையையும், மன ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கிறது. பணியிடத்தில் மன அழுத்தம் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் நடத்தை ஆகியவை பலரின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சிரமங்கள் அன்றாட வாழ்க்கையையே சீர்குலைக்கும். அப்படிப்பட்ட ஒரு இளம் பெண்ணின் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலதிகாரி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண், சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவோ கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான இந்த இளம் பெண்ணின் செய்தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட்-இல் வெளியாகியுள்ளது. மேலதிகாரியின் நடத்தை இளம் பெண்ணின் மனநிலையை எவ்வாறு பாதித்தது என்பதை பற்றி இந்த அறிக்கை கூறியுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, பணியிடத்தில் மேலதிகாரி திட்டியதால் லி மனம் உடைந்து போனதாகவும், இதன் காரணமாக கடுமையான மனநலப் பிரச்சனைகளுக்கு ஆளானதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த லி என்ற இளம் பெண், பணியிடத்தில் தனது மேல் அதிகாரி திட்டியதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. தகராறு முற்றிய நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த இளம்பெண் வேலையில் இருந்து வீடு திரும்பினார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான லி, சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ இல்லை. மேலும் அவர் மற்றவர்களிடம் பேச கூட மறுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அவரின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து அவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு லிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இளம்பெண்ணுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து மருத்துவர் கூறியதாவது, லி மிகுந்த மன உளைச்சலுடன் வேலையில் இருந்து திரும்பி வந்துள்ளார். இவர் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத இயல்பு கொண்டவராக இருப்பதால், அவரால் தன் மன பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதனால் நிலைமை மோசமாகியது.

இதனையடுத்து, அந்த பெண் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாமல் தவித்தார். மனப் பிரச்சனைகள் பிற்காலத்தில் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது. அவர் பலவீனமாக உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவரால் தினசரி நடவடிக்கைகள் கூட செய்ய முடியவில்லை. அதாவது கழிவறைக்குச் செல்வதற்குக் கூட அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் தற்போது குணமடைந்து வருகிறார். இந்த சம்பவம் சீன சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் வேலையிலிருந்து விலகி இருப்பது நல்லது என்று பலர் கூறிவருகின்றனர்.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post