
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மழையால் இருதரப்புக்கும் 47 ஓவராக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தடுமாற்றமாக விளையாடி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 76, மிட்ச் ஹே 49 ரன்கள் எடுத்தார்கள். இலங்கைக்கு அதிகபட்சமாக தீக்சனா 3, ஜெப்ரி வாண்டர்சே 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
பின்னர் 210 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 28, பெர்னாண்டோ 5, கமிண்டு மெண்டிஸ் 0, கேப்டன் அசலங்கா 13, சமரவிக்ரமா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 93-5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இலங்கையின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மூன்றாவது இடத்தில் நங்கூரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் நிதானமாக பேட்டிங் செய்தார்.
அவருக்கு எதிர்ப்புறம் ஜனித் லியனகே 22, வெல்லலாகே 18, மஹீஸ் தீக்சனா 27* ரன்கள் எடுத்து கை கொடுத்தார். அதை பயன்படுத்தி மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய குசால் மெண்டிஸ் 74* ரன்கள் குவித்தார். அதன் காரணமாக 46 ஓவரில் 210-7 ரன்கள் குவித்த இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை போராடி தோற்கடித்தது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
அதன் மூலம் 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரை இலங்கை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. இதையும் சேர்த்து கடைசியாக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக தொடர்களில் வெற்றி பெற்று இலங்கை வரலாறு காணாத சாதனையும் படைத்துள்ளது.
இதற்கு முன் 1997 – 2003 வரையிலான காலகட்டங்களில் தங்களுடைய சொந்த ஊரில் இலங்கை 5 ஒருநாள் தொடர்களில் தொடர்ந்து வென்றதே முந்தைய அதிகபட்ச சாதனையாகும். இது போக நியூசிலாந்துக்கு எதிராக 2012க்குப்பின் முதல் முறையாக ஒரு தொடரில் வென்று இலங்கை அசத்தியுள்ளது. அந்த வகையில் சமீப காலங்களில் பெரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ஜெயசூர்யா பயிற்சியாளராக வந்த பின் மறுமலர்ச்சி வெற்றியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments