Ticker

6/recent/ticker-posts

டொனால்ட் டிரம்ப் வெற்றி : பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

அமெரிக்க (America) ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றால் பிரித்தானியா (Britain) பிரெக்ஸிட்டை திரும்பப் பெற வேண்டியது கட்டாயம் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானால், பிரித்தானியா துரிதமாக ஐரோப்பாவுடனான உறவுகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று Pro-EU ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில், உலகளாவிய வர்த்தக போர் நிலையை சமாளிக்க பிரித்தானியா, customs union அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர்ந்து தன்னை பாதுகாக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரம்

டொனால்ட் டிரம்ப், தனது வெற்றிக்கு பிறகு அனைத்து இறக்குமதிகளுக்கும் பத்து வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதுடன், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு இது 60% வரை அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இது உலகளாவிய பொருளாதாரத்தையும் பிரித்தானியாவியும் பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக SNP உறுப்பினர் ஸ்டீபன் கேதின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா தற்போது உலகில் அதிகமாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் மற்றும் பாதுகாப்பான வர்த்தக இணைப்புகளையும் உருவாக்குவதற்கான ஒரே வழி ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவது” என அவர் தெரிவித்துள்ளார்.

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments