உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் ஒப்புதல் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவும் தனது ராணுவத்தில் சமீபத்தில் வடகொரிய ராணுவத்தையும் இணைத்து போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வரும் அமெரிக்கா, உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பல முக்கிய நகரங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
அதனால் இந்த அனுமதியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்து எச்சரித்து பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது ரஷ்யா ராணுவம் உக்ரைனுக்கு எதிராக போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடைசியாக 1945ல் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவம் ஜப்பான் மீது வீசிய 2 அணுகுண்டுகளால் லட்சக்கணக்கான மக்கள் சில விநாடிகளில் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளில் எந்த போரிலும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் புதினின் இந்த முடிவால் பல நாடுகளும் கவலையில் ஆழ்ந்துள்ளன.
webdunia
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments