Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்கா Googleஇன் Chrome தளத்தை விற்கச் சொல்லலாம்: தகவல்


Google நிறுவனத்தின் Chrome தளம் விற்கப்படவேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தக்கூடும்.

அந்நாட்டு ஊடக அறிக்கை அதனைத் தெரிவித்தது.

Bloomberg வெளியிட்ட அந்தத் தகவல் குறித்து அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்க மறுத்தனர்.

Google செயல்படும் விதத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனக் கோரப்போவதாக அவர்கள் சென்ற மாதம் (அக்டோபர்) கூறியிருந்தனர்.

சென்ற ஆகஸ்ட் மாதம் Google ஏகபோக முறையில் செயல்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

Google தேடல் சேவைகளை முதன்மைத் தேடல் தளமாகத் திறன்பேசிகளில் கொண்டுவர Apple உள்ளிட்ட திறன்பேசி தயாரிப்பாளர்களுக்கு Google பணம் கொடுத்ததாக வழக்கு விசாரணையில் தெரிந்தது.

அதன் மூலம் பயனீட்டாளர்களின் தரவுகளைப் பெற்று உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் தளமாக அதனை உருமாற்றியதாக நீதிபதி கூறியிருந்தார்.

Google தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments