தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக முனீர் முளப்பர் நியமனம் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில் விருப்பு வாக்குகள் மூலம் 17 பேர்களும், தேசியப் பட்டியல் மூலம் ஒருவரும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நாடாளுமன்றம் கூடியதும், பிரதி சபாநாயகர் பதவிக்கு டொக்டர் ரிஸ்வி சாலிஹ் தெரிவானார்.
இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முஸ்லிம்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஷ்-ஷெய்க் முனீர் முளப்பர் முன்னிலை வகிக்கின்றார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பேருவலை ஜாமிஆ நளீமிய்யாவில் கற்றவராவார். நளீமிய்யாவில் கற்ற மூவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், இவர் மட்டுமே நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
கம்பஹா மாவட்டம், திஹாரியவில் குடியேறி, கம்பஹா மாவட்ட முஸ்லிம் சிங்கள மக்களின் விருப்பு வாக்குளினால் நாடாளுமன்றம் சென்றுள்ள, அஷ்-ஷெய்க் முனீர் முளப்பரின் வெற்றிக்காக இனவாதத்திற்கப்பால், இன வேறுபாடின்றி சகல இனத்தவர்களும் அவருக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அதனால்,கம்பஹா மாவட்டத்தில் மக்களின் விருப்பு வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற முதல் முஸ்லிமாக இவர் வரலாற்றில் இடம்பெறுகின்றார்.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அஞ்சான் உம்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் இங்கிருந்து நாடாளுமன்றம் அனுப்பப்பட்டிருந்தார்.
அஷ்-ஷெய்க் முனீர் முளப்பர் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள் 109,815 ஆகும். அந்த வகையில் இம்முறை நாடாளுமன்றத்துக்கு அதிகளவான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினராக இவர் கருதப்படுகிறார்.
ஐ.ஏ.ஸத்தார்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments