Ticker

6/recent/ticker-posts

புதிய பிரபஞ்ச அழகிக்குக் காத்திருக்கும் அரிய வகை தங்க நிற முத்துக் கிரீடம்

இவ்வாண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டி மெக்சிக்கோ தலைநகரில் நடைபெறவுள்ளது. 

அதில் வெல்லவிருக்கும் அழகிக்குப் புதியதொரு கிரீடம் காத்திருக்கிறது.

ல மேர் ஒ மெஜஸ்ட்டி (“La Mer en Majeste") என்று பெயரிடப்பட்ட கிரீடத்தில் அரிய வகை தென் கடல் தங்க நிற முத்துகள் பதிக்கப்பட்டுள்ளன. 

அந்த முத்துக்களை அறுவடை செய்ய நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரையாகும்.

இது பிரபஞ்ச அழகிப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பதின்மூன்றாவது கிரீடம். 

மற்ற அழகிப் போட்டிகளைக் காட்டிலும் ஆக அதிக முறை புதிய கிரீடங்களை அறிமுகப்படுத்திய பெருமை பிரபஞ்ச அழகிப் போட்டிக்குச் சேரும்.

120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்குபெறவுள்ள பிரபஞ்ச அழகிப் போட்டி நவம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments