மைக்ரோசாப்ட் 365 இணையப் பயன்பாடுகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 நிர்வாக மையத்திற்கான அணுகல்களில் தடை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச ரீதியிலான குறித்த செயலிழப்பை மைக்ரோசாப்ட் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அவுட்லுக், ஒன்ட்ரைவ் மற்றும் பிற மைக்ரோசாப்ட் 365இன் பயன்பாடுகள் போன்ற சேவைகளை தங்கள் இணைய உலாவிகள் மூலம் இணைக்க முயற்சிக்கும் பயனர்களை குறித்த செயலிழப்பு பாதித்துள்ளது.
பல மணிநேரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த செயலிழப்பு தொடர்பில் பாதிக்கப்பட்ட பயனர்கள் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், “பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மூலம் சில பயனர்களுக்கு, இணையத்தில் மைக்ரோசாப்ட் 365 இல் உள்ள பயன்பாடுகளை அணுக முயற்சிக்கும் போது இதன் தாக்கம் ஏற்படுகிறது" என்று நிறுவனம் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் குறிப்பிடத்தக்க சேவை இடையூறுகளை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலகளாவிய மைக்ரோசாப்ட் 365 செயலிழப்பு, Microsoft Teams, Exchange Online, SharePoint Online, OneDrive, Purview, Copilot மற்றும் Outlook இன் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் போன்ற சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இதன் தாக்கம, மின்னஞ்சல் செயற்பாடுகளை தாமதப்படுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, தீர்வை விரைவில் பெற்று, அதன் அமைப்புகளை நிலைத்தன்மைக்காகக் கண்காணித்ததன் பிறகு, சேவையை முழுமையாக மீளமைக்கப்படும் என மைக்ரோசாப்ட் உறுதியனித்துள்ளது.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments