மும்பை: 2024 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நடந்த சில எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சிகளை குறித்து பார்க்கலாம். 2025 ஐபிஎல் மெகா ஏலம் பரபரப்பான நிகழ்வாக அமைந்தது. சில வீரர்கள் கேப்டன் பதவியை துறந்து விட்டு ஏலத்தில் பங்கேற்று பெரும் தொகையை சம்பளமாக பெற்றார்கள்.
சிஎஸ்கே அணி வழக்கம் போல தங்கள் அணியின் முன்னாள் வீரர்களையும், சில இளம் திறமையாளர்களையும் குறி வைத்து வாங்கியது. சிஎஸ்கே அணி சில ஏமாற்றங்களையும் சந்தித்தது. ஆர்சிபி அணி சர்வதேச அனுபவம் இல்லாத வீரரை 6 கோடி கொடுத்து வாங்கி வியப்பை ஏற்படுத்தியது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
2025 ஐபிஎல் மெகா ஏலம் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரும் சம்பளத்தை அளித்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நம்பமுடியாத விலையான 27 கோடிக்கு வாங்கியது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு வீரருக்கும் கிடைத்த அதிகபட்ச தொகையாகும். ரிஷப் பண்ட் பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதை கருத்தில் கொண்டால், லக்னோ அணியின் இந்த துணிச்சலான நடவடிக்கை பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 26.75 கோடிக்கு வாங்கியது. இது அவரது தலைமைப் பண்புகள் மற்றும் தொடர்ச்சியான செயல்திறனுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி ஜோஸ் பட்லரை ரூ.15.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. இதுவே இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரருக்குக் கிடைத்த அதிகபட்ச தொகையாகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி என்ற பெரிய தொகைக்கு மீண்டும் வாங்கியது. அவரது திறமை மற்றும் தாக்கத்தை கருத்தில் கொண்டு அந்த அணி அவரை போட்டி போட்டு வாங்கியது.
இந்திய டி20 அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் கிங்ஸ் அணி தலா 18 கோடிக்கு வாங்கி பெரிய முதலீடை செய்தது. இதன் மூலம் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவானதாக மாறி உள்ளது.
சிஎஸ்கே அணி ஏலத்தில் சில அதிரடி நகர்வுகளை மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த ஆல் ரவுண்டர் சாம் கர்ரனை வாங்கியது. சாம் கர்ரன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஆர்டிஎம் மூலம் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 2.40 கோடிக்கு வாங்கியது.
மேலும், ரச்சின் ரவீந்திராவை ஆர்டிஎம் மூலம் வாங்கிய சிஎஸ்கே அணி, எட்டு ஆண்டுகளுக்கு பின் அஸ்வினை தங்கள் அணியில் இணைத்தது. சர்வதேச அனுபவம் இல்லாத ரஷிக் தார் மற்றும் நேஹால் வதேரா பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள். ஆர்சிபி அணி ரஷிக்கை 6 கோடிக்கு வாங்கியது. நேஹால் வதேராவை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.20 கோடிக்கு வாங்கியது.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments