Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிரிய ஜனாதிபதி அசாதின் மனைவிக்கு பிரித்தானியாவில் இடமில்லை: யார் இந்த அஸ்மா அசாத்?


சிரியாவிலிருந்து தப்பியோடியுள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் மனைவிக்கு பிரித்தானியாவில் இடமில்லை என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

யார் இந்த அஸ்மா அசாத்?

சிரியாவின் முதல் பெண்மணியான அஸ்மா அசாத் (Asma Fawaz al-Assad), ஒரு பிரித்தானியக் குடிமகள் ஆவார்.

1975ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த அஸ்மா, அங்குதான் வளர்ந்தார், கல்வியும் கற்றார்.

கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறுவதற்காக லண்டன் சென்ற அசாத், அங்குதான் அஸ்மாவை சந்தித்தார்.

தான் சிரிய ஜனாதிபதியானதும், அஸ்மாவை மணந்துகொண்டார் அசாத்.  

அசாதின் மனைவிக்கு பிரித்தானியாவில் இடமில்லை

இந்நிலையில், தன் கணவரான அசாதுடன் சிரியாவை விட்டு தப்பியோடியுள்ள அஸ்மா, பிரித்தானியாவுக்குத் திரும்ப முயற்சிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அஸ்மா தடை விதிக்கப்பட்ட ஒரு நபர் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவுச் செயலரான டேவிட் (David Lammy), அஸ்மாவுக்கு பிரித்தானியாவில் வரவேற்பில்லை, அல்லது இடமில்லை என்று கூறியுள்ளார்.

lankasri



 Ai SONGS

 



Post a Comment

0 Comments