Ticker

6/recent/ticker-posts

Ad Code



“கொன்னு களையும் சாரே..” தலைமை ஆசிரியரை பகிரங்கமாக எச்சரித்த மாணவன் - அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!


கேரள மாநிலத்தில் பள்ளிக்குள் செல்போன் பயன்படுத்திய மாணவனிடம் இருந்து செல்போனை பறித்த தலைமை ஆசிரியருக்கு மாணவர் பகிரங்கமாக கோலை மிரட்டல் விடுத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஒருவர் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். அந்த பள்ளிக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் என்றால் அப்படித்தான் இருக்கும் அதையெல்லாம் மதிக்க வேண்டுமா? என்ற நினைப்பில் இருந்த அந்த மாணவர் செல்போனை தவ்லத்தாக கொண்டு சென்று வந்துள்ளார்.

இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், அந்த மாணவனை செல்போன் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தி எச்சரித்துள்ளனர். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அந்த மாணவர் செல்போனை பள்ளிக்கு வகுப்பறையில் பயன்படுத்தியபடி இருந்திருக்கிறார். சம்பவத்தன்று அந்த மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த ஆசிரியர், அந்த மாணவனிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், ஆசிரியரிடம் சரமாரியாக வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார் வகுப்பாசிரியர் ஆத்திரம் தலைக்கேறிய மாணவர் நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு ஆவேசமாக சென்றுள்ளார். தலைமை ஆசிரியரின் எதிரே இருந்த பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு தோரணையாக உட்கார்ந்த மாணவர் செல்போனை கொடுத்து விடுமாறு ஆக்ரோஷமாக மிரட்டியிருக்கிறார்.

இதனால் வௌவௌத்துப் போன தலைமை ஆசிரியர் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் ஆக்ரோஷம் குறையாத அந்த மாணவன் கொந்தளிப்பாக தொடர்ந்து தகாத வார்த்தைகளால் மரியாதைக் குறைவாக பேசியபடியே இருந்தார். இருந்தபோதும் செல்போனைத் தர தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் புயலென பொங்கி எழுந்த அந்த மாணவர், "செல்போனை திரும்ப தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொன்று விடுவேன்" என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டல் விடுத்து விட்டு அறையில் இருந்து வேகமாக வெளியேறியிருக்கிறார். பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த போதும் மாணவனின் எதிர்காலம் கருதி அவர் மீது பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவரது ஒழுக்கக்கேடான செயலை எடுத்துக் கூறி எச்சரித்தனர். இந்நிலையில், இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments