
அமெரிக்காவுக்கு எதிராக கனடா கூடுதலாக 20.7 பில்லியன் டொலர் வரியை விதித்துள்ளது.
கனடா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29.8 கனேடிய பில்லியன் (20.7 பில்லியன் டொலர்) மதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதல் வரி (Retaliatory Tariffs) விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தக முறைகளை அமெரிக்காவுக்கு சாதகமாக மாற்றும் நோக்கில் இரும்பு, அலுமினியத்தில் ஏற்கனவே விதித்திருந்த வரிகளை அதிகரித்துள்ளார்.
இதற்கு எதிராக கனடாவின் நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் பதிலடி நடவடிக்கையாக கனடா தனது பதிலடி வரிகளை வியாழன் முதல் அமுல்படுத்தும் என்று அறிவித்தார்.
கனடா, அமெரிக்காவிற்கு அதிக அளவில் இரும்பு மற்றும் அலுமினியத்தை வழங்கும் நாடாகும்.
கனடாவின் புதிய வரிகள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன:
இரும்பு பொருட்கள் மீது 12.6 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வரி விதிக்கப்பட்டுள்ளது.
அலுமினியம் பொருட்கள் மீது 3 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வரி விதிக்கப்பட்டுள்ளது.
கணினிகள், விளையாட்டு உபகரணங்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் மீது 14.2 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக விவகாரம் கனடா - அமெரிக்கா உறவுகளை மேலும் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), புதிதாக லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னியிடம் (Mark Carney) அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாராகி வருகிறார்.
இதனிடையே, ட்ரம்ப் மீண்டும் தனது சமூக ஊடக பதிவில் "கனடா, 51-வது அமெரிக்க மாநிலமாக மாற வேண்டும்" என விவகாரமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments