
"அவங்க சித்திக்கு ஒரு பொண்ணு இருக்கு குமரா அந்த பொண்ணுக்கு சீர் செய்திடவே ரொக்கமும் பணமும் கேட்டார் நிலம் வீடு மாப்பிள்ளை பெயரில் பதிவு செய்திடச் சொன்னார் அவையும் என் பேத்திக்கு குழந்தை இல்லா விட்டால் வீடு நிலம் மறு மணம் செய்திடும் பெண் பெயரில் கொடுப்பதாக பேசிக் கொண்டு இருந்தார்கள் குமரா நான் என் பேத்தியிடம் இதைக் கூறவில்லை .
அவளுக்கு அந்த மாப்பிளைப் பையனை மனசுக்கு புடிச்சுப் போய் விட்டது இவைகளையெல்லாம் கூறி மனதை வேதனைப் படுத்த வேணாமே என்று மௌனம் கொண்டேன் எனது பேத்தி தாயாகிடுவாள் என்று நம்பிக்கை உண்டு இறைவனிடம் கொடுத்து விட்டேன் அந்தப் பொறுப்பை எனக் கூறி கண் கலங்கி நின்றார் மூத்த மருத்துவர் அமைதி காத்த அனைவரும் ஒருவர் முன் ஒருவராகக் கரிச்சுக் கொண்டனர் மாப்பிளையின் சித்தியை சினமாக.
ஓகோ இப்படி வேறு சட்டம் போட்டு இருக்கா அந்தப் பொம்புளை பாவி அவளை நாளு அறை போடவேணும் குமரா எனக்கு அப்படி ஓர் ஆத்திரம் என்று கூறி முடித்தான் சரவணன் .
அண்ணே அப்படி செய்வது தவறு அதற்கு வேறு வழியில் தண்டனை கொடுத்திட வேண்டும் அந்த மாப்பிளை பயந்த சுவாவமோ? எனக் குமரன் சரவணனிடம் கூறிச் சிரிக்க அப்படித்தான் நினைக்கிறேன் குமரா பொண்ணையன் போல என்றான் சரவணன் ஏனையோரும் ஆமா ஆமா என்று கூறிச் சிரித்தார்கள் மூத்த மருத்துவர் மாத்திரம் மௌனமானார்.
பெருமூச்சு விட்ட படி குமரன் சொன்னான் ஐயா உங்க பேத்திக்குப் புரிய வையுங்கள் அந்த வரன் வேண்டாம். அவர்கள் உங்கள் பேத்தியைக் கண்டிப்பாக பாசமாக நடத்த மாட்டார்கள் இதை விட வலி உங்களை சூழ்ந்து கொள்ளும் ஆகையால் அதை வேண்டாம் எனக் கூறி விடுங்கள் நான் என் தந்தையிடம் கூறி நல்ல வரன் அமைத்துத் தருகிறேன் கவலைப் படாதீர்கள். நல்லதே நடக்கட்டும் நடக்கும் கலியாணச் சிலவுக்காக இதோ என் கையில் உள்ள பணப் பொதியையும் தருகிறேன் இதில் எத்தனை ரூபா உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும் இதை இப்போதே நான் தருகிறேன் கவலையைத் துடைத்தெறியுங்கள் ஐயா என்றான் புன்னகையோடு.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments