
29.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை கோவை சுந்தராபுரத்தில் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் கோவை வெண்ணிலா மன்றம் மற்றும் சென்னை மீடியா இணைந்து நடத்திய இலக்கியத் திருவிழா - 2026 சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சான்றோர் பெருமக்கள் முன்னிலையில் குறளாசான் தமிழ்ச்செம்மல் தமிழாசிரியர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்குத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் மேனாள் இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஆர். விஜயராகவன் ஐயா அவர்கள் கையால் திருக்குறள் தூதர் விருது வழங்கி சிறப்பிக்கப்பெற்றது

அருகில் வெண்ணிலா இலக்கியக் கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பாலதமிழ்ச்செல்வன் செயலாளர் கவிதாஞ்சலி, சென்னை மீடியா இயக்குநர் A.சவுகத்அலி, கவிஞர் வாகை துரைசாமி மற்றும் சான்றோர் பெருமக்கள்.

விழாவில் வெண்ணிலா இலக்கியக் கலை மன்றத்தின் நிறுவனர் கவியகம் மணிவண்ணன் ஐயா அவர்கள் படத்திறப்பும், நான்கு நூல்கள் வெளியீடும் ,
பல்துறை அறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பெற்றன.
நிறைவாக மதியம் நூர் சமூக அறக்கட்டளை சார்பாக அனைவருக்கும் விருந்துணவு வழங்கப் பெற்றது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
திருக்குறளை இன்று கிராமம்,நகரம் என்று எங்கு பார்த்தாலும் பரவ முக்கிய காரணமாக திகழும் திரு அன்வர் பாட்சா அவர்களை கௌரவப் படுத்துவது தமிழ் பற்றுள்ள அனைவருடைய கடமையாகும்!
ReplyDelete- துடுப்பதி ரகுநாதன்
அகவை முதிர்ந்த தமிழறிஞர், கோவை-36