Ticker

6/recent/ticker-posts

திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!


2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளன.

இதில், திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அறிவித்துள்ளது.

அதில், ”மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் திருநர் - திருநங்கையர் நலவாழ்வுக் குழு (TWC - Transgender Welfare Committee) அமைக்கப்படும்.

மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர்.

இளம் திருநர், திருநங்கையர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், ஆதரவுக் கரம் நீட்டிடவும் Helpline உருவாக்கப்படும்.” என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த அரசியல் கட்சிகளும் அவர்களை கண்டுகொள்ளதாதபோது, திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தி.மு.க கொடுத்துள்ள வாக்குறுதி கவனம் பெற்றுள்ளது. மேலும் திருநர் - திருநங்கையர் அனைவரும் இந்த வாக்குறுதியை வரவேற்றுள்ளனர்.

kalaignarseithigal


 


Post a Comment

0 Comments