
ஈரானில் கிளர்ச்சியைத் தூண்டி ஆட்சி மாற்றம் காணத் துடித்த ட்ரம்பின் முயற்சிக்கு மாறாக, சொந்த மண்ணிலேயே வரலாறு காணாத போராட்ட அலை உருவாகியுள்ளது.
ஈரான் நாட்டு மக்கள் தங்கள் தலைமைக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று டிரம்ப் விடுத்த அழைப்பு அங்கு பலிக்காத நிலையில், தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
"மன்னராட்சிக்கு இடமில்லை" (No Kings) என்ற முழக்கத்துடன் வீதிகளில் திரண்டுள்ள மில்லியன் கணக்கான மக்கள், தற்போதைய ட்ரம்ப்பின் அதிகாரப்போக்கிற்கு எதிராகக் கடும் கண்டனக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
பிரிவினைவாத அரசியலும் தீவிரவாத சித்தாந்தங்களும் ஒருபோதும் ஸ்தீரத்தன்மையைக் கொண்டுவராது என்பதற்கு இந்த உள்நாட்டு எதிர்ப்பே சாட்சியாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது ஒரு பெரிய அளவிலான எதிர்ப்பு இயக்கமாக இருந்தாலும், அமெரிக்காவின் தலையெழுத்தை உடனடியாக மாற்றிவிடாது.
அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, தேர்தல் சுழற்சி மற்றும் அதிகாரப் பிரிவினை போன்ற கட்டமைப்புகள் காரணமாக, தற்காலிக இந்தப்போராட்டங்கள் எந்தவொரு மாற்றத்தை உருவாக்கப் போவதில்லை.
2025ல் ட்ரம்ப் இரண்டாவது முறை
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு, Indivisible, 50501 போன்ற குழுக்கள் தலைமையில் "No Kings" என்ற பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின.
மார்ச் 29, 2026 அன்று இதன் மூன்றாவது அலை நடந்தது — அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 3,000 இடங்களில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.
"அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை; அதிகாரம் மக்களிடம் உள்ளது" என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டங்களின்போது, ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரப் பலம், குடியேற்றக் கொள்கை, ஈரானுக்கு எதிரான போர் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நிகழ்ந்தன.
இது அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய ஒரு நாள் போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ட்ரம்ப் 2024 தேர்தலில் வெற்றி பெற்று 2025ல் பதவியேற்றார். அடுத்த தேர்தல் 2028ல் நடைபெறும்.
இவ்வாறான போராட்டங்கள் பொதுமக்கள் கருத்தை மாற்றுமே தவிர; காங்கிரஸ் பெரும்பான்மை 'ரிபப்ளிகன்' கட்டுப்பாட்டில் இருப்பதால், ஜனாதிபதியின் கொள்கைகளை ஒருபோதும் மாற்றப்போவதில்லை!'நோ கிங்ஸ்'ஸினால் ஜனாதிபதியின் 'ஒப்புதல் மதிப்பீடு' ஓரளவுக்குக் குறையுமே தவிர, அது ஜனாதிபதியின் உடனடி பதவி இழப்புக்கு வழிவகுக்காது! அதுமட்டுமல்லாது, இவ்வாறான மக்கள் போராட்டங்கள் 2026 காங்கிரஸ் தேர்தலில் அல்லது 2028 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் வாக்கு வங்கிகளைத் திரட்ட உதவலாமே தவிர, அமெரிக்க அரசியலில் அல்லது ட்ரம்பின் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
பொருளாதாரம், போர் போன்ற பிரச்சினைகள் மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன; ஆனால் அவை தேர்தல் மூலமே தீர்க்கப்படும்; அமெரிக்க அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டது.
"No Kings" ஒரு சக்திவாய்ந்த குரலாக இருந்போதிலும், அது ஜனநாயகத்தின் உயிர்ப்பை நினைவூட்டுவதைத் தவிர வேறு எதனையுள் செய்யாது!
அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றுவது வாக்காளர்கள், தேர்தல்கள் மற்றும் நீண்டகால அரசியல் உத்திகள்; இவ்வாறான போராட்டங்கள் அந்த செயல்முறையை வேகப்படுத்தலாம்.

அமெரிக்கா 1776ல் இருந்தே "No Kings" என்ற கோட்பாட்டில் நிலைத்து நிற்கின்றது. இந்த இயக்கப் போராட்டம் அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது; ஆனால் உண்மையான மாற்றம் மக்களின் வாக்குப் பெட்டியில்தான் இருக்கிறது! நாம் நினைப்பதுபோல அமெரிக்க வாக்காளர்கள் அந்த அளவுக்குப் புத்திசாலிகள் அல்லர்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments