Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதத்தின் தீவிரத்தை அளவிடும் குறியீடு: சர்வதேச அளவில் பாகிஸ்தான் முதலிடம்!


சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் தீவிரத்தை அளவிடும் GLOBAL TERRORISM INDEX பட்டியலில் அண்டை நாடான பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமான IEP, GLOBAL TERRORISM INDEX பட்டியலை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலின் பாதிப்பு மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் வெளியான இப்பட்டியலில், முதன் முறையாக பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் மட்டும் 1,045 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், அதில் 1,139 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு பயங்கரவாத தாக்குதலால் ஓராண்டில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக கைபர், பலூசிஸ்தான் மாகாணங்களில் தாக்குதல் அதிகளவில் நடந்திருப்பதாகவும், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதன் மூலம், பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாக IEP தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பட்டியலில் மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா ஃபாசோ 2 ஆவது இடத்திலும், நைஜீரியா 3 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

news18


 


Post a Comment

0 Comments