Ticker

6/recent/ticker-posts

ராஜபக்சர்களின் அரசியல் பாணியில் இறங்கிய ஹர்ஷ, அஜித், தயாசிறி நாடாளுமன்றத்தை நாற்றமடிக்கச் செய்கின்றனர்…


நாடாளுமன்றத்தின் நேரடி ஒளிபரப்பின் ஊடாக தரமற்ற அரசியலை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகிய சட்டத்தரணிகளும், கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் மேற்கொண்ட முயற்சி தொடர்பாக மக்கள் மத்தியில் கடும் வெறுப்புணர்வு எழுந்து வருகின்றது.

ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த 2015–2019 காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட தரமற்ற அரசியலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சி நேற்று (23) நாடாளுமன்றத்தில் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்த முயற்சி தொடர்பாக சமூக ஊடகங்களில் உடனடி பிரதிபலிப்புகளை வெளியிட்ட பெரும்பாலானோர், வெறுப்புடனும் கோபத்துடனும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கீழ்த்தரமான நடத்தையை கண்டித்துள்ளனர்.

சட்டத்தரணிகளுமான அஜித் பி. பெரேரா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்ற நிலையான கட்டளைகளை திரிபுபடுத்தி பயன்படுத்தியமை தொடர்பாக, சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க எளிமையாக விளக்கமளித்தார்.

lankatruth


 


Post a Comment

0 Comments