
மனிதர்களின் குரலை வைத்து ஆடுகளால் உணவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
மற்ற மிருகங்களைவிட ஆடுகளுக்கே இந்தத் திறன் மிகுதியாக உள்ளது என்றும் முதற்கட்ட ஆய்வு சொல்கிறது.
ஸூரிக் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், ஒரு திரையின் இரு புறங்களிலும் இரண்டு வாளிகள் வைக்கப்பட்டன.
அவற்றில் ஒன்றில் மட்டும் உணவு இருந்தது.
மறைந்திருந்த ஆய்வாளர் உணவு இருந்த வாளியை நோக்கி உற்சாகமாகப் பேசியபோது, ஆடுகள் 60 விழுக்காட்டு நேரங்களில் சரியான வாளியைத் தேர்வு செய்தன.
ஆனால் ஆய்வாளர் அமைதியாக இருந்தபோதோ, வாளிகளுக்கு எதிர்த்திசையில் பேசினாலோ, ஆடுகளின் தேர்வு சரியாக அமையவில்லை.
பயிற்சி இல்லாமலேயே ஆடுகள் மனிதக் குரல் குறிப்புகளைப் பின்பற்ற முடியும் என்பதை ஆய்வு காட்டுவதாக நம்பப்படுகிறது.
மேலும், பண்ணை விலங்குகள் மனிதர்களையும் சுற்றுப்புறத்தையும் எவ்வாறு புரிந்து கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வு விளக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் நாய்களுக்கு மட்டுமே இந்தத் திறன் உள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments