
Pizza Hut 2.7 பில்லியன் டாலருக்கு விற்கப்படுவதாக அதன் உரிமையாளரான Yum! Brands நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் அதன் செயல்பாடுகளை Yum China Holdings நிறுவனம் 1.2 பில்லியன் டாலருக்கு வாங்கவுள்ளது.
சீனாவுக்கு வெளியே உள்ள செயல்பாடுகளை LongRange Capital நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்குப் பெரும்.
Pizza Hut நீண்ட காலமாகச் சிரமத்தில் இருந்ததாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
அமெரிக்காவில் அதன் வியாபாரம் மந்தமாகியுள்ளது.
Domino's, Papa John's, Little Caesars உள்ளிட்ட மற்ற கடைகளிலிருந்து போட்டி அதிகரித்திருப்பது அதற்குக் காரணம்.
விநியோகச் செயலிகளிலும் பல்வேறு பீஸ்ஸா கடைகள். எக்கச்சக்க சலுகைகள்.
Pizza Hut-இன் ஆதிக்கம் சரிந்தது.
அதன் விற்பனை குறித்து சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதம் தகவல் வெளியானது.
1958ஆம் ஆண்டு அமெரிக்காவின் கான்சஸ் மாநிலத்தில் இரு சகோதரர்கள் Pizza Hut கடையை நிறுவினர்.
1977ஆம் ஆண்டு PepsiCo நிறுவனம் அதை வாங்கியது.
1997ஆம் ஆண்டு அது Yum! Brands எனும் நிறுவனத்திற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது.
KFC, Taco Bell ஆகிய கடைகளும் Yum! Brands நிறுவனத்திற்குக் கீழ் செயல்படுகின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments