Ticker

6/recent/ticker-posts

எடைக்கொத்த தக்காளி பரிசு: சம்பியன்களுக்கு விசித்திர மரியாதை


உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஸ்பெய்னின் வரலாற்று வெற்றியில் முக்கிய பங்கு வகித்த நட்சத்திர வீரர்கள் பேபியன் ரூய்ஸ், கவிக்கு, அவர்களின் சொந்த ஊரில் மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேடையில் நிறுத்தப்பட்டு எடை பார்க்கப்பட்ட வீரர்கள்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள அன்டலூசியாவில் அமைந்துள்ள லொஸ் பலாசியோஸ் வை வில்லாஃப்ராங்கா என்ற ஊரைச் ரூய்ஸ், கவி. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பின் சொந்த ஊருக்குத் திரும்பிய இந்த வீரர்களுக்கு, நகர மண்டபத்தில் (Town Hall) பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவின் சுவாரஷ்யமான தருணமாக, இரண்டு வீரர்களும் மேடையில் அமைக்கப்பட்டிருந்த தராசில் நிறுத்தப்பட்டு எடை பார்க்கப்பட்டனர்:

ரூய்ஸ்: 84 கிலோ கிராம்
கவி: 68 கிலோ கிராம்
இருவரின் எடையும் கணக்கிடப்பட்டதும், அவர்களின் எடைக்குச் சமமான அளவில் (மொத்தம் 152 கிலோ) புதிதாகப் பறிக்கப்பட்ட சுவையான தக்காளி பழங்கள் நகராட்சி நிர்வாகத்தால் பரிசாக வழங்கப்பட்டன.

2010-இல் தொடங்கிய விசித்திர பாரம்பரியம்

இந்த நகரம் உலக அளவில் தரமான தக்காளி உற்பத்திக்கு மிகவும் பிரபலமானது. அதேநேரம், சர்வதேச அளவிலான சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதிலும் இச்சிறிய நகரம் முன்னணியில் உள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பெய்ன் முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியபோது, அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்த ஊரைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜெஸுஸ் நவாஸுக்கு முதன்முதலாக அவரது எடைக்கு நிகராகத் தக்காளி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து உலகக் கிண்ண அல்லது யூரோ வெல்லும் ஒவ்வொரு முறையும், இந்த ஊரைச் சேர்ந்த வீரர்களுக்கு அவர்களின் எடைக்கு நிகரான தக்காளிகளைப் பரிசளிக்கும் இந்த பிரத்யேகப் பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

tamilmirror


 


Post a Comment

0 Comments