Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 5



இன்னா நாற்பது –7.

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை.

விளக்கம்: 
  • திறமை இல்லாதவன் கையில் இருக்கும் போர்க் கருவி துன்பமாகும். 
  • வாசனை இல்லாத மலரின் அழகு துன்பமாகும்.
  • தெளிவு இல்லாதவன் காட்டும் துணிச்சல் துன்பமாகும். 
பொருள் தெரியாமல் பேசுவது துன்பமாகும். 

இன்னா நாற்பது-8.

பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.

விளக்கம்:
  • வெள்ளை மனம் கொண்டிருப்பவர் பண்பில்லாமல் இருப்பது துன்பமாகும்.
  • சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் அன்பில்லாமல் இருப்பது துன்பமாகும்.
  • போரில் புறமுதுகிட்டு ஓடும் நிலை ஏற்படுவது துன்பமாகும். 
  • கொஞ்சங்கூட நீதி யில்லாமல் இருப்பவர்களுடனான நட்பு துன்பமாகும். 
(தொடரும்)

 


Post a Comment

0 Comments