வருந்துவதைப் பாருங்களேன்
காற்றிலே நீரைக் கொண்டு
சேற்றிலே தூவுங்களேன்
வாழ்க்கையே போர்களமே
வாழ்வெல்லாம் அமர்க்களமே.
வார்த்தையும் இல்லையே
வார்த்திட கவிதைகளுமே.
பாயிலே உறக்கமில்லை
பாவியுன்னிடம் இறக்கமில்லை.
பாய்ந்து வரும் வெள்ளம் இன்னும்
பாடாய்ப் படுத்திகிறதே .
தேவைகள் தேறவில்லை
தேய்யுதே சந்தோசமலை.
தேடியே சேர்த்ததெல்லாம்
தேங்கிய தண்ணீரிலே போகுதே.
இந்தக் கொடுமை இன்னும் ஏனோ.
இரக்கமற்றுப் போனதோ இறைவா.
இழந்தது அதிகமே அறிவாயோ
இழப்பு இனிமேலும் வேண்டாமே.
துயரமோ தோணியாக மாறுதே
துடுப்பில்லாத பயணமாகிப் போனதே.
துடித்திடும் உயிர்களின் விழிநீரினைத்
துடைத்திட அனர்த்தமதை நிறுத்திடு.
போதும் போதும் உனது அகோரம்
போதையாட்டம் போடாதே நீயும்.
போசனம் இன்றி தவிக்குது நாடு
போட்டி போடாதே வாழ்க்கையோடு.
தணியாத தாகம் தனித்ததும் போதும்
தவிப்பைக் கொடுத்ததும் போதும்
தத்தழிக்கும் வாழ்வுதனை நீயும்
தந்ததும் போதும் நிறுத்திடு நிறுத்திடு.
தண்ணீரை மழையென தூவிடும்
கருமுகிலே கருணையிட்டு நிறுத்திடு.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
நன்றிகள் அண்ணா
ReplyDelete