
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்துவருகிறது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.
இந்த விவகாரத்தில் 20 நாளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தது அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்ததாக தெரிகிறது.
இதேபோல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளை ஜே.பி. நட்டா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீட் வினா தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இன்று மாலை வரை அதற்கான அவகாசத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments