Ticker

6/recent/ticker-posts

கோவை தமிழாசிரியர் முனைவர் மு.க.அன்வர்பாட்சா அவர்களுக்குப் "பொய்யாமொழி- தலைமைக்கவி" விருது


திருப்பூரில் MLR மஹால் அரங்கத்தில் நடந்த 133 கவிஞர்களின் கவிக்குரல் நூல் வெளியீடு மற்றும்    10 ஆளுமை மிக்கோர் தலைமையில் 133  கவிஞர்களின் மாபெரும் கவியரங்கம் இனிதே நடைபெற்றது.

விழாவிற்கு ஈரோடு மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் திருமதி வே.ஜோதி அவர்கள் தலைமையேற்று திருக்குறளின் கவிக்குரல் நூல் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 கவிஞர்கள் கவிதை படைத்து, அவை திருக்குறளின் கவிக்குரல் என்ற பெயரில் சுமார் 1,500 பக்கங்களில் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது.

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கவிதை வடிவில் புதிய இலக்கியப் பார்வையை வழங்கும் இந்நூல், தமிழ் வளர்ச்சிக்கும் திருக்குறள் பரப்புக்கும் சிறப்பான பங்களிப்பாக அமைந்துள்ளது. 

விழாவில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்தும் நூல் உருவாக்கத்தில் பங்கேற்ற 133 கவிஞர்கள் அனைவருக்கும் விருதுகளும்,கேடயங்களும் வழங்கிப் பாராட்டப்பெற்றனர்.
திருக்குறளின் 133 அதிகாரங்களையும் 133 கவிஞர்களின் கவிதைகளால் இணைத்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். 

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக இனிதே நடைபெற்ற இவ்விழாவைத் தமிழ்நாடு கனகரத்தினம் கவிமன்ற நிறுவனர் திருப்பூர் பாவலர் கவிச்செம்மல் கனகசிவா மற்றும் அவரது குடும்பத்தார் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


 


Post a Comment

7 Comments

  1. அருமையான பதிவு...நெஞ்சார்ந்த நன்றி...உங்களுடைய இதழியல் அறப்பணிக்கு இறையருள் துணைபுரியட்டும் ...மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான இந்த நிகழ்வினை பதிவிறக்கம் செய்து வெளியிட்டு பெருமையும் புகழையும் தந்த வேட்டை நிறுவுனத்தார் அவர்களுக்கும் எனது உற்ற நண்பர் குறள் யோகி மு க அன்வர் பாட்சா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    என்றென்றும் அன்புடன் நான் உங்கள் தமிழன்பன் பாவலர் கனகசிவா, திருமதி புவனா சிவம்
    தமிழ்நாடு கனகரத்தினம் கவிமன்றம்.
    ஈட்டிவீராம்பாளையம் திருப்பூர்.

    ReplyDelete
  3. வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா. இந்த நிகழ்வில் பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல உங்களது தலைமையில் நானும் கவியரங்கில் கவிதை வாசித்தேன் என்பது நான் செய்த பெரும் பாக்கியம் என்று கருதுகிறேன். இந்த வாய்ப்பு வழங்கிய பாவலர். கனவு சிவா ஐயா அவர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புகைப்படத்தில் நானும் இடம் பெற்று இருப்பது மிக சிறப்பு. மிக்க மகிழ்ச்சி.
    சு. நடராஜன்
    சிவகிரி
    ஈரோடு மாவட்டம்

    ReplyDelete
  4. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில், முனைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில்
    கவிதை வாசிக்க வேண்டிய
    கவிஞர்களின் பட்டியலில் (065 சொல்வன்மை) நானும் இருந்தேன். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாள் நிகழ்வில் பங்கேற்று அந்த கவிதையை வாசித்தேன். கவியரங்கத் தலைமைக்கும், பாவலர் கனக சிவா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
    க. குணசேகரன், சென்னை

    ReplyDelete
  5. இந்த பொய்யா மொழிக் கவி விருது
    நானும் பெற்றேன்
    என் பெயர் ஈரோடு கவிப்பிரியன்

    ReplyDelete
  6. நல்லதொரு இந்நிகழ்வில் நானும் ஓர் அதிகாரத்திற்கு கவி புனைந்தேன் என்பதே பேருவகைத் தருகிறது.

    அய்யா கனகசிவா அவர்களுக்கு நன்றியுடையவனாகிறேன்.

    ReplyDelete
  7. வரலாற்று நிகழ்வினை வலைதள பதிவாக கடவுச்சீட்டு இன்றி கடல் கடந்து வானளாவிய வள்ளுவனின் குறளுக்கு குரல் கொடுத்த கவிப்பெருமக்களின்
    பங்களிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்த இவ்விழாவினை தாங்களும் விமர்சித்தமைக்கு மிக்க நன்றி
    மேலும் இவ்விழா மேடையில் எனது கவிதை தொகுப்புகளான
    காதல் கணைகள் மற்றும் அரசியல்வாதிகளா வியாதிகளா
    இவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வும் நிகழ்ந்தேறியமைக்கு பெருமிதம் கொள்வதோடு விழாவினை முன்னெடுத்த நண்பர் திரு பாவலர் கனக சிவா அவர்களுக்கும் நன்றியுரை க்கிறேன்

    ReplyDelete