குறள் 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி
அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது.
ஞாயிறு
பொழுது விடிஞ்சுச்சா!
நான் இன்று ஊருக்குப்போறேன்!
பத்துநாள் விடுமுறையில்
போறேன்!
குட்டிப்பேத்திக்கிட்ட
சொல்லிட்டுப்போவோம்!
அவளுக்கும் பள்ளிக்கூடம்
விடுமுறைதான்!
பேத்தி வளையலப் பார்த்தாள்!
ஏங்கி மெலியப்போகும்
தோளைப்பார்த்தாள்!
தன்பாதங்களைப்பார்த்தாள்!
தானும் கூடவரனும்னு
குறிப்பால சொல்றா!
சரி அழைத்துச் செல்வோம்!
குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப
கண்ணினால் காமநோய் சொல்லி இரவு
நானும் என்அம்மாவும்
சித்திவீட்டில் கடந்த மூன்றுநாளாக
தங்கி இருக்கின்றோம்!
எனக்கு பள்ளிவிடுமுறைதான்!
அம்மா இன்று புறப்படச்சொல்கின்றாள்!
சித்திமகள் கவிதாவுக்கு விடுமுறைதான்!
கவிதாவைப் பார்த்தேன்!
கண்களால் தூதுவிடுகின்றாள்!
இப்பொழுது போகவேண்டாம்
என்று கூறுகின்றாள்!
இது கவிதாவின்
அழகுக்கு அழகுசேர்க்கிறது!
ரசித்துச் சிரித்தேன்!
குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
அந்தத் தொடர்வண்டியில்
பயணிகள் ஏறுவதும்
இறங்குவதுமாக
தெரிநசலில் முட்டிமோதிக்
கொண்டிருந்தனர்!
நான் சானரத்துக்கு அருகில்
உட்கார்ந்து
சிரித்துப் பேசிக்கோண்டிருந்தேன்
அம்மாவிடம்!
அப்போது என்னையும் அறியாமல்
என்பார்வை ஒருத்திமீது பட்டது!
அவளும் என்னைப் பார்த்தாள்!
அட ராகவியா நீ!
பாத்து ரெண்டு ஆண்டுகள்
ஆச்சுடி
உன்ன அடிக்கடி நெனப்பேண்டி
வாடி கொஞ்சநேரம் பேசலாம்!
நீயும் இதே பெட்டிதானே?
நெனச்சாலே இன்பந்தான்!
நட்புத் தோழிய மாத்தா பேரின்பந்தான்!
எனக்குப் பிடிச்ச
பாடத்த படிச்சாத்தான் மகிழ்ச்சி!
நம்ம நட்பு அப்படி இல்ல!
நினைத்தாலே இனிக்கும்!
பார்த்தாலோபரவசந்தான்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments