மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa), மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) மற்றும் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஆகியோர் அடங்குவர்.

ஏனைய அமைச்சர்களில் சுமார் ஐந்து முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சுமார் 10 முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் சுமார் 25 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது நண்பர்களை அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமின்றி எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு ஒன்று கட்சி மாறி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கையில்(sri lanka) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post