அரசின்அதிரடி மாற்றங்கள்-6

அரசின்அதிரடி மாற்றங்கள்-6


தேர்தல் செலவு ஆவணத்தில் ஜனாதிபதிகையொப்பமிட்டார்!

இவ்வருடம் பொதுத் தேர்தலை நடத்த செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  கையொப்பமிட்டுள்ளதாக பொதுத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின்  அமைச்சரவை மாநாடு.

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நேற்று 2024.09.30 மாலை நடை பெற்றது.

அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவை  தனியார் மயமாக்கப்படாது!

தேசிய மக்கள் சக்தி  அரசு ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுகிறது.

தூதுவர்கள் சந்திப்பு:

ஜனாதிபதி அநுரவை சந்தித்த ரஷ்ய தூதுவரும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும்  சந்தித்து நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்!

பஸ் கட்டணம் குறைப்பு:

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4.24% குறைக்கப்படவுள்ளது.  குறைந்தபட்ச கட்டணம் ரூ.27 ஆகும்.

லிட்ரோவுக்கு புதிய தலைவர்:

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ எரிவாயு மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd இன் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

சன்னா, அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்ற, பட்டய நிர்வாகக் கணக்காளர்களின் பட்டய நிறுவனத்தில் ஒரு சக மற்றும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்களின் சக ஊழியருமாவார்.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத் துறையில் முதல் தரப் பட்டம் பெற்றுள்ளார்.
CLICK 👇👇👇


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post