Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-64


325. வினா:ஆட்சியாளர் தம் மதிப்பு இழப்பர் - எப்போது?
விடை: நாள்தோறும் அறிந்து மக்கள் குறை தீர்க்காத போது
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்(.553)

326.வினா:செல்வத்தைத் தேய்க்கும் படை எது?
விடை: மக்கள் துன்புற்று அழுத கண்ணீரே 
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை..(555)

327. வினா : நாட்டில் பருவம் தவறி மழை பெய்யாது எப்போது?
விடை: நேர்மை தவறி ஆட்சி செய்தால்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.(559)

328. வினா:நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் செயல் யாது?
விடை: மிகக் கடிந்து, தண்டனை குறைவாக்குபவர் 
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.
(562)

329. வினா:பேயிடம் அகப்பட்ட செல்வம் போன்றது எது?
விடை: சிடுசிடுத்தவனிடம் உள்ள செல்வம்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் போய்கண் டன்னது உடைத்து.(565)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments