ஜப்பானில் ஆசிரியர் தினம் கிடையாது...!

ஜப்பானில் ஆசிரியர் தினம் கிடையாது...!

ஒரு நாள், எனது ஜப்பானிய சக ஆசிரியரான யமமோட்டாவிடம் கேட்டேன்:
ஜப்பானில் ஆசிரியர் தினத்தை எப்படி கொண்டாடுகிறீர்கள்?
என் கேள்வியால் வியப்படைந்த அவர் பதிலளித்தார்:

 எங்களுக்கு ஆசிரியர் தினம் என்று எதுவும் இல்லை.

அவருடைய பதிலைக் கேட்டதும், அவரை நம்பலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.

பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் மிகவும் முன்னேறிய ஒரு நாடு, ஆசிரியர்களையும் அவர்களின் பணிகளையும் ஏன் அவ்வளவாக மதிக்கவில்லை?" என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.

ஒருமுறை, வேலை முடிந்ததும், யமமோட்டா என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார்.  தொலைவில் இருந்ததால் மெட்ரோவில் சென்றோம்.  அது மாலை பீக் ஹவர், மெட்ரோ ரயிலில் இருந்த வேகன்கள் நிரம்பி வழிந்தன.  ரயிலின் மேல் நிலை கயிறை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நிற்க ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன்.

திடீரென்று, என் பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் தனது இருக்கையை எனக்கு வழங்கினார்.   ஒரு முதியவரின் இந்த மரியாதைக்குரிய நடத்தையைப் புரிந்து கொள்ளாமல், நான் மறுத்துவிட்டேன், ஆனால் அவர் விடவேயில்லை, நான் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  நாங்கள் மெட்ரோவில் இருந்து வெளியேறியதும், எதற்காக அந்த முதியவர் அப்படி செய்தார் என்பதை  யமமோட்டாவிடம் விசாரித்தேன்.

யமமோட்டா சிரித்துக்கொண்டே எனது சட்டையில் நான் அணிந்திருந்த டீச்சர் என்ற குறிச்சொல்லைச் சுட்டிக்காட்டி சொன்னாள்:

 உங்கள் உடையின் மீது ஒரு ஆசிரியரின் குறியீடைக் கண்டதும் உங்கள் அந்தஸ்துக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக, அவருடைய இருக்கையை உங்களுக்கு வழங்கினார்.

நான் முதன்முறையாக யமமோட்டா வீட்டிற்கு சென்றதால், வெறுங்கையுடன் அங்கு செல்வது எனக்கு சங்கடமாக இருந்தது, அதனால் ஒரு பரிசு வாங்க முடிவு செய்தேன்.  நான் யமமோட்டாவிற்கு எனது யோசனையைச் சொன்னேன், அவர் எனது யோசனையை ஏற்று, இன்னும் சிறிது தூரம் சென்றால், ஆசிரியர்களுக்கான கடை உள்ளது, அங்கு ஆசிரியர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்று கூறினார்.   மீண்டும், என்னால் என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை:

ஆசிரியர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுகிறதா ?  எனக் கேட்டேன்.

 என் வார்த்தைகளை உறுதிப்படுத்தி, யமமோட்டா கூறினார்:

ஜப்பானில், ஆசிரியர் பணி என்பது மிகவும் மரியாதைக்குரிய தொழில் மற்றும் ஆசிரியர் மிகவும் மரியாதைக்குரிய நபர்.   ஜப்பானிய தொழில்முனைவோர் ஆசிரியர்கள் தங்கள் கடைகளுக்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள், அவர்கள் கடையில் ஆசிரியர்கள் பொருள் வாங்குவதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள் என்றார்.

 நான் ஜப்பானில் தங்கியிருந்த காலத்தில், ஆசிரியர்கள் மீது ஜப்பானியர்கள் வைத்திருந்த மிகுந்த மரியாதையை நான் பல முறை கவனித்திருக்கிறேன்.

மெட்ரோவில் அவர்களுக்கென பிரத்யேக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அவர்களுக்கென பிரத்யேக கடைகள் உள்ளன, ஆசிரியர்கள் எந்த வகையான போக்குவரத்துக்கான டிக்கெட்டுகளுக்காகவும் வரிசையில் நிற்க தேவையில்லை. 

அதனால்தான் ஜப்பானில் ஆசிரியர்களுக்கு என ஒரு சிறப்பு நாள் தேவைப்படவில்லை, அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்.

இந்த அளவிற்கு ஆசிரியர்களை பாராட்டும் சமுதாயம் வளர வேண்டும்.

 இதை உங்கள் குழுக்களில் பகிருங்கள், இதைப் பார்த்து ஆசிரியர் நெஞ்சங்கள் பெருமிதம் கொள்ளட்டும்.


whatsapp



 



Post a Comment

Previous Post Next Post