உலகின் மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ள நாடு எது தெரியுமா?... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உலகின் மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ள நாடு எது தெரியுமா?... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கி உள்ள ஒரு நாடு உலகில் உள்ளது. தற்போது யாராவது ஒருவர் அந்த நாட்டுக்கு சென்றால், அவர் சுமார் 8 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுவார். ஒருவர் இந்த நாட்டிற்குள் 2022ஆம் ஆண்டு நுழைகிறார் என்றால், அவர் 2014ஆம் ஆண்டில் இருக்கிறார் என்று அர்த்தம். அதாவது சுமார் 8 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறார். அங்கு எது வாங்கினாலும் அல்லது வேறு ஏதேனும் பில் வாங்கினாலும் செய்தாலும் அது 8 வருடங்களுக்கு முந்தைய ஆண்டையே காட்டும்.

 இது கேட்பதற்கு டைம் மெஷின் கதை போல் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை. அது எந்த நாடு என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். அது எத்தியோப்பியா நாடு. எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் பழமையான சுதந்திர நாடு. ஆனால் எத்தியோப்பியா உலகின் மற்ற பகுதிகளை விட சுமார் 8 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

 உலகின் பிற பகுதிகள் கிரிகோரியன் நாட்காட்டியை (Gregorian calendar) பயன்படுத்தும் நிலையில், எத்தியோப்பியா நாட்டில் எத்தியோப்பியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தற்போது வரை அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர்.

 எத்தியோப்பியன் நாட்காட்டி, கிரிகோரியன் நாட்காட்டியை விட 8 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது. எத்தியோப்பிய நாட்காட்டியில் 13 மாதங்கள் உள்ளன. அதாவது, எத்தியோப்பியாவில் ஒருவருடத்துக்கு 13 மாதங்கள்.

 அதன்படி, எத்தியோப்பியா தற்போது 8 வருடம் பின்தங்கி உள்ளது. இதன் காரணமாக, பிற நாடுகளில் இருந்து இங்கு வேலை செய்ய வருபவர்கள் அல்லது சுற்றுலா பயணிகள், அங்குள்ள தேதி மற்றும் ஆண்டை, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாற்றி, ஒவ்வொரு முறையும் அந்த நாளின் தேதியை பார்க்க வேண்டும்.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post