Ticker

6/recent/ticker-posts

A380 ரக விமானங்களில் விரிசல்


எமிரேட்ஸ் (Emirates), குவாண்டாஸ் (Qantas) விமான நிறுவனங்களின் A380 ரக விமானங்கள் சோதிக்கப்பட வேண்டும் என்று ஏர்பஸ் (Airbus) நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தின் ரெக்கையின் முக்கிய பாகங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளை அவசரமாக மேற்கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு நிறுவனம் (European Union Aviation Safety Agency) உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 16 விமானங்களில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது.

15 விமானங்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவை.

ஒரு விமானம் குவாண்டாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

எமிரேட்ஸ் நிறுவனத்தின் 5 விமானங்களின் சோதனை உடனடியாகத் தொடங்கும்.

எமிரேட்ஸ் நிறுவனம் ஆக அதிகமாக A380 ரக விமானங்களை இயக்குகிறது.

தற்போது A380 விமானங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனமும் ஒன்று.

இறுதியாக 2012ஆம் ஆண்டில் A380 ரக விமானங்களில் விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

seithi


 


Post a Comment

0 Comments