
ஐரோப்பிய சமூகத்தின் தாராளவாதக் கொள்கைகளின் மையமாக விளங்கும் ஸ்வீடனில், ஒரு புதிய சட்டம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான, குறிப்பாக மாமன் - மகள், அத்தை - மகன் போன்ற ரத்த சொந்தங்களுக்குள் நடக்கும் திருமணங்களைத் தடை செய்யும் மசோதா, ஸ்வீடன் நாடாளுமன்றமான 'ரிக்ஸ்டாக்'-கில் (Riksdag) செவ்வாயன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம், ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பதா அல்லது குடியேறிகளின் கலாச்சாரத்தில் தலையிடுவதா என்ற அனல் பறக்கும் விவாதங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இறுக்கமான குடும்பக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் இளம் பெண்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகவே இந்தச் சட்டம் பார்க்கப்படுகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments