
அணுசக்தி மையங்களை ஆய்வுசெய்ய ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று ஈரானிற்கு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணுசக்தி மையங்களில் சோதனை நடத்த அனுமதி அளிக்காவிட்டால், ஈரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா- ஈரான் இடையேயான போர், அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்விட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஒப்பந்தத்தின்படி, ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் பார்வையிட ஈரான் அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மேயில் பகேய், அணுசக்தி மையங்களில் ஆய்வு நடத்துவது தொடர்பாக எந்தவொரு உறுதியையும் ஈரான் வழங்கவில்லை என்று தெரிவித்தார். அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் உறுப்பினர் என்ற முறையில் அதற்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில், தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அணுசக்தி மையங்களில் காலவரையின்றி உயர்மட்ட ஆய்வுசெய்ய ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனை மறுத்து போலியான செய்திகள் வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி மையங்களை ஆய்வுசெய்ய ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனை மறுத்து போலியான செய்திகள் வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணுசக்தி மையங்களை ஆய்வுசெய்ய ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
jvpnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments