Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-46


குறள் 226:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி

மற்றவர் வன்பசி ஆற்றுவது சேர்த்துவைத்த செல்வத்தை வைக்கும் இடம்.

குறன் 227:

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது.

வாழ்வில் பகிர்ந்துண்போர் தம்மைப் பசிநோயோ நீண்ட நெருங்காதுணர்.

குறள் 228:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.

ஈயாமல் பொருளை இழப்போர், அறியாரோ ஈவதன் இன்பத்தை இங்கு?

குறள் 229:

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.

பிறருக்கே ஈயாமல் சேர்த்துக் குவித்தல், இரத்தலை விஞ்சும் இழிவு.

குறள் 230:

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை

சாதலின் துன்பத்தை விஞ்சும் இயலாமை வேதனைத் துன்பம் உணர்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments