
புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருப்பின், ஆகஸ்ட் 03 ஆம் திகதி வரை இணையவழி (Online) மூலமாக அத்திருத்தங்களைச் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடுகள், அந்தந்த பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை இணையவழியில் மேற்கொள்ள முடியும்.
அதற்கமைய, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்குச் சென்று “Our Services” (எமது சேவைகள்) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” என்ற பகுதிக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது onlineexams.gov.lk என்ற வலைத்தளத்திற்குச் செல்வதன் மூலமாகவோ உரிய திருத்தங்களைச் செய்ய முடியும்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையானதுஓ 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments