
நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதிவான மொத்த நோயாளர்களில் 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்பு கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17,679 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 6,298 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம்; 3,569 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அத்தொகை 29,973 ஆகும்.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 3,686 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும், 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக சுகாதார பிரிவினரால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments