Ticker

6/recent/ticker-posts

டியுஷன் பணத்தில் மதுவை சுமந்த மாணவன்


பண்டாரவளையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து, 19 வயதுடைய மாணவன் ஒருவன் மதுபான போத்தல் வாங்கிச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சிங்கள மொழி ஊடகம் ஒன்றில் செய்தியாக பதிவிடப்பட்டுள்ளது

(வீடியோவில் மாணவன் மற்றும் மதுபான நிலைய ஊழியர்களின் முகங்கள் தெரிவதால் வீடியோவை இங்கு இணைக்கவில்லை)

இன்று புதன்கிழமை காலை சுமார் 8.00 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், முதுகில் பாடசாலைப் பையை சுமந்தபடி மதுபான விற்பனை நிலையத்திலிருந்து வெளியே வந்த மாணவனை, பொதுமகன் ஒருவர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்துகிறார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் போது, தனியார் வகுப்புக் கட்டணத்திற்காக பெற்றோரிடம் இருந்து பெற்ற பணத்தை பயன்படுத்தி 3,100 ரூபாய் மதிப்புள்ள மதுபானப் போத்தலை வாங்கியதாக அந்த இளைஞர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குறைந்த வயதுடைய இளைஞருக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட மதுபான விற்பனை நிலையத்தின் பணியாளர்களிடமும் அந்த பொதுமகன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது எதிர்ப்பைத் தொடர்ந்து, விற்பனை நிலைய ஊழியர்கள் இளைஞரிடமிருந்து சாராயப் போத்தலை மீண்டும் பெற்றுக்கொண்டு, அதற்காக செலுத்தப்பட்ட 3,100 ரூபாய் பணத்தையும் அவருக்கு திருப்பி வழங்கியதாகக் காணொளியில் பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞன், “தேசிய அடையாள அட்டையை பாருங்கள்.. அவனுக்கு 19 வயது தான். நீங்கள் எப்படி பாடசாலை மாணவனுக்கு சாராயம் விற்கலாம் ? யார் இந்த மதுபான நிலைய உரிமையாளர்?” என்று கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காணொளியில் அவர் மாணவனின் புத்தகப்பையை திறந்து காட்டும் போது பையினுள் புத்தகங்களும் மதுபான போத்தலும் ஒன்றாக இருக்கிறது.

tamilmirror


 


Post a Comment

0 Comments