அந்தச் சிறிய பூக்கடை மட்டும் ஏற்கனவே விழித்திருந்தது.
மல்லிகையின் மணமும்,ரோஜாவின் மென்மையும்,கனகாம்பரத்தின் நிறமுமாக அங்கே வந்த அனைவரையும் காந்தம் போல இழுத்தது.
அந்தச் சிறிய பூக்கடை ஒரு சொர்க்கம் போலத் தோன்றியது.
அவள் பெயர் பூங்கொடி.
அந்தக் கடையின் நடுவில்பூக்களைச் சீராக அடுக்கிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.
அவளது கைகளில் இருந்த பூக்கள்கூட கதை பேசுவதைப் போல இருந்தன.அவள் கட்டும் மாலைகளும் சிரித்தன.ஆனால், அவளது இதயத்தில்
சொல்லப்படாத பல கதைகள் மௌனமாக மறைந்திருந்தன.
ஆனாலும் கடைக்கு வருபவர்களிடம் தன் சோகங்களை அவள் காட்டிக்கொள்வதில்லை.
அவள் சிரித்த முகத்துடன்,அங்கு வரும் அனைவருக்கும் கேட்கும் பூக்களை அளந்து கொடுத்து கொண்டிருந்தாள்.
அந்த அதிகாலையின் அமைதிக்குள்,என் பூக்கடையின் முன் நின்ற அந்த நிழல் யார்...?
ஆதியா...?அல்லது வேறு யாரோ...?
ஐந்து வருடங்களுக்கு முன்,சிறிய தெருவோரத்தில் இருந்தது அவளின் பூக்கடை.
அப்போது அங்கு வரும் மக்களில் ஆதியும் ஒருவன்.
அவன் தினமும் வந்து,தன் வாகனத்துக்குள் இருக்கும் சாமி படத்துக்கு பூ வாங்கி வைப்பான்.
அப்படியே தினமும் வந்துசென்ற அந்தச் சந்திப்புகளில்,அவளுக்கும் அவனுக்கும் நாளடைவில் ஒரு நட்பு மலர்ந்தது.
பூங்கொடிக்கும் ஆதிக்கும் நல்ல நட்பு உருவானதற்குக் காரணம் அங்கு வரும் மக்களே.
அவர்கள் பூ வாங்கிச் செல்வார்கள்,அதற்கும் மேலாக எதையும் கேட்க மாட்டார்கள்.
ஆனால் ஆதி மட்டும் கொஞ்சம் வித்தியாசம்.அவன் பூ வாங்குவதோடு மட்டும் இல்லாமல்,அவளின் சுகநலத்தையும் விசாரிப்பான்.
அவளை ஒரு சாதாரண பூக்காரி என்று ஒருநாளும் எண்ணியதில்லை.
அந்த அக்கறைதான் அவர்களுக்குள் ஒரு அழகான நட்பை மலரச் செய்தது...
அவள் பூ விற்கும் அந்தத் தெருவில் ஒரே பிரச்சனை எழுந்தது.
பூங்கொடி இருந்த இடத்தை மாற்ற வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது.
இதைக் ஆதியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் அவன் வருவான் என்ற நம்பிக்கையிலே,ஒவ்வொரு மலரையும் பூமாலையாகக் கட்டிக்கொண்டே அவனின் வருகையை எதிர்பார்த்தாள் பூங்கொடி.
அவள் கண்களில் கவலை இருந்தது,இதயத்தில் ஒரு கேள்வி மட்டும் ,“ஆதி வருவானா...?”
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





1 Comments
அருமை 😊
ReplyDelete