அரசின் அதிரடி மாற்றங்கள்-7

அரசின் அதிரடி மாற்றங்கள்-7


விசாரணைகள் இரண்டு விரைவில்:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகள் பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது வளங்களை வீணடிக்கும் விழாக்களுக்கும் தடை:

விழாக்கள் நடத்துவதற்காக தேவையற்ற பணம் மற்றும் பொது வளங்களை வீணடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் பிரதமர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்:

ஜனாதிபதி தேர்தலில் வென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், தொலைபேசி ஊடாகவும், நேரிலுமே  வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள செய்தியில், இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஆழமடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவரும் அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டில்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்திய மத்திய அரசின் ஆலோசனையின் பிரகாரமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அநுர ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணமாக டில்லி விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோவை (Andres Marcelo Gonzales Gorrido) இன்று (02.10.2024) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

அதன்போது,  புதிய ஆட்சிக்கு வாழ்த்துத் தெரிவித்த கொன்ஷாலேஸ் இலங்கையுடனான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு கியூபா தயாராக இருப்பதாக அறிவித்தார். 

அத்தோடு டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின்  தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், இலங்கையில்  டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கு கியூபா அரசாங்கம்  ஆர்வமாக இருப்பதாகவும் கொன்ஷாலேஸ் அறிவித்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், IMF இன் உயர்மட்டக் குழு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

எரிபொருள், பஸ் கட்டணம் விலை குறைப்பு:

புதிய அநுர அரசில் ஓக்டேன் 92 பெட்ரோல் 311 ரூபாய்
ஓக்டேன் 95 பெட்ரோல் 377 ரூபாய்,ஓடோ டீசல் 283 ரூபாய், சுபர் டீசல் 319 ரூபாய், மண்ணெண்ணை 183 ரூபாய், ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 27 ரூபாய்.

CLICK 👇👇👇


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post