அரசின் அதிரடி மாற்றங்கள்-11

அரசின் அதிரடி மாற்றங்கள்-11


இரு வாரங்களில் பொருட்களின் 
விலை குறையலாம்!

நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் 
பிரதானியாக
தம்மிக்க பிரியந்த:

அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பிரியந்த நியமனம்

பிணைமுறி மோசடி நபர்கள் யார்?

பிணைமுறி மோசடியில் பணத்தை பகிர்ந்துகொண்டவர்கள் யார் என்பதை மக்களுக்கு வௌிப்படுத்துவோம் என வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

விழாக்களில் வீண்விரயம் 
தேவையில்லை:

விழாக்கள் நடத்துவதற்காக தேவையற்ற பணம் மற்றும் பொது வளங்களை வீணடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் பிரதமர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகம் நவீனமயம்

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்க 61.5 மில்லியன் டொலர்களை இந்தியா வழங்குகின்றது!

நேரம் வரும்வரை காத்திருங்கள்:

"முடிந்தால் ஊழலை வெளிப்படுத்துங்கள்" என்று கேட்கும் முன்னாள் எம்.பி.க்களுக்கு லால் காந்தா அதிரடியாகப் பதில் கூறியுள்ளார். 

"தமது நேரம் வரும்வரை பொறுமை காக்க வேண்டும்" என தேசிய மக்கள் படையின் தேசிய செயற்குழு உறுப்பினர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.

"அகற்றப்பட்டு, அரசு இயந்திரம் ஏற்கனவே சுதந்திரமாகச் செயல் படுகிறது.

பொதுத்தேர்தல் முடியும்வரை இந்த நாட்டை நிர்வகிப்பதற்கு பொறுப்புடன் செயற்படும் மூன்று மக்கள் பிரதிநிதிகளும் ஊழல், மோசடி விசாரணைகள் தொடர்பில் தேசிய மக்கள் படை, அரசாங்கத்தின் அடிப்படை பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ளதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி.

முறைப்பாடுகளை 2 
வாரங்களுக்குள் விசாரணை:

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட, விசாரணை மேற்கொள்ளப்படாத மற்றும் நிறைவுறுத்தபடாத முறைப்பாடுகளை 2 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை.

 



Post a Comment

Previous Post Next Post